குழந்தை பாதுகாப்புக்கான 24 மணிநேர இலவச தொலைபேசி எண் 1098 குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இதில், குழந்தை தொழிலாளர்கள், போதை பழக்கத்திற்குள்ளான குழந்தைகள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள், குழந்தை கடத்தல், பெண் சிசுக்கொலை, பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை 1098 என்ற இலவச எண் மூலம் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்வது குறித்து பறையடித்து நடனம் ஆடி இளைஞர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் ஏன பலரும் பார்த்து ரசித்தனர். 1098 விழிப்புணர்வு குறித்த பதாகையை மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் பள்ளி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் மூலம் குழந்தை பாதுகாப்பை எடுத்துக்கூறிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைபெற்றது.
இதையும் படிங்க: நான்கு மாத குழந்தை ரூ. மூன்று லட்சத்திற்கு விற்பனை - சேலத்தில் அவலம்!