சென்னையில் இருந்து வரும் 11 ஆம் தேதி காலை சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், திருச்சி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கல்லணை கால்வாய் செல்கிறார்.
கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று அடைய வசதியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் நவீனப்படுத்துதல், சீரமைப்பு பணிகள் 65 கோடி ரூபாய் செலவில் நடைப்பெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை முதலமைச்சர் நாளை (ஜூன் 9) ஆய்வு செய்வதுடன், அலுவலர்களுடன் ஆலோசனையும் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருவாரூர் மாவட்டம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து ஜூன் 12 ஆம் தேதி கார் மூலம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை செல்லும் முதலமைச்சர், அங்கு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியப்பின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவைக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் துரைமுருகன், எ.வ.வேலு, நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கவுள்ளனர்.