ETV Bharat / state

'கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்..!' - தங்கமங்கை ஜெனிதா - physically challenged

திருச்சி: "ஆசிய கிராணட் ஸ்லாம் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்" என்று, மாற்றுத்திறனாளிக்களுக்கான உலக பேரா செஸ் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை ஜெனிதா தெரிவித்துள்ளார்.

தங்கம் வென்ற செஸ் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு!!!
author img

By

Published : Jul 8, 2019, 6:42 PM IST

சுலோவாக்கியா நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பேரா செஸ் விளையாட்டு போட்டிகள், ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை ஜெனிதா கலந்துக் கொண்டார். இவர் செஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில், ஜெனிதா விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். அதன் பின் அங்கு கூடியிருந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பலர் அவருக்கு பூச்செண்டு கொடுத்து, மாலை, சால்வை அணிவித்தும், கைதட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தங்கம் வென்ற செஸ் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு!

பின்னர் ஜெனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், "19ஆவது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர் வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர். இந்தியாவில் இருந்து ஐந்து பேர் கலந்து கொண்டனர். இதில் பெண் பிரிவு செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். இது நான் பெறும் 6வது தங்கப்பதக்கம். இதற்காக பயிற்சியாளர் சுந்தரராஜன், எனது பெற்றோர், குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அனைத்து செஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்" என்றார்.

Intro:உலக பாரா செஸ் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Body:திருச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா விளையாட்டு போட்டிகள் சுலோவாக்கியா நாட்டில் ரிசர்வ் பர்க் என்ற இடத்தில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஊனமுற்ற வீராங்களை ஜெனிதா கலந்து கொண்டார்.
இதில் அவர் உங்களிடம் பிடித்தது பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற பின்னர் முதல் முறையாக நாடு திரும்பிய ஜெனிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.
பின்னர் அங்கு கூடியிருந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பலர் அவருக்கு பூச்செண்டு கொடுத்து மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், கைதட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இது குறித்து ஜெனித்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை சுலோவாக்கியா நாட்டில் நடந்த 19வது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவில் இருந்து ஐந்து பேர் கலந்து கொண்டனர். இதில் திருச்சியை சேர்ந்த நானும், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவரும் கலந்துகொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பெண்கள் பிரிவு போட்டியில் நான் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றேன். இது நான் பெறும் 6வது தங்கப்பதக்கம் ஆகும்.
இந்த வெற்றிக்காக நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு எனது பெற்றோர், குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அனைத்து செஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது பயிற்சியாளர் சுந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளஆசிய கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம் என்றார்.

Conclusion:2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கிராண்ட் ஸ்லாம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதே லட்சியம் என்று ஜெனித்தா கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.