ETV Bharat / state

புற்றுநோய் விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்த ஆட்சியர்!

திருச்சி: ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பரப்புரை வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

trichy cancer awareness programme  ஹர்ஷமித்ரா மருத்துவமனை  Harshamitra Hospital  Cancer Awareness Campaign on behalf of Harshmitra Hospital  ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்  திருச்சி புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்  மாவட்ட ஆட்சியர் சிவராசு  District Collector Sivarasu
trichy cancer awareness programme
author img

By

Published : Feb 4, 2021, 4:59 PM IST

திருச்சி மத்திய ரோட்டரி சங்கம், சர்வதேச ரோட்டரி சங்கம், ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரோஸ் கார்டன் அறக்கட்டளை ஆகியவை சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பரப்புரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் லட்சுமி ஆகியோர் பங்கேற்று பரப்புரை வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

இதில், ஹர்ஷமித்ரா மருத்துவமனை இயக்குநரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கோவிந்தராஜ், மத்திய ரோட்டரி சங்கத் தலைவர் மருத்துவர் ரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதே போல், தொழிலதிபர் எஸ்.ஏ. கிளமெண்ட்ஸ், ஹர்ஷமித்ரா மருத்துவமனை ஊழியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பரப்புரை வாகனங்கள் திருச்சி மாநகர் முழுவதும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புற்றுநோய் விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகம் செய்து பரப்புரையில் ஈடுபட்டன.

இதையும் படிங்க: மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய மரபணு பரிசோதனை முக்கியமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும் : பாகம்-2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.