திருச்சி: துவரங்குறிச்சி போக்குவரத்து பணிமனை மேலாளர் மகேந்திரன் (52). இவர் தன்னை தாக்கியதாக அதே பணிமனையில் பேருந்து ஒட்டுநராக பணியாற்றும் பாலாஜி (46) என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஓட்டுநர் பாலாஜி மீது துவரங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே பாலாஜி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான காவல்துறையினர் பாலாஜியை கைது செய்தனர்.
பின்னர் அவரை மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது