திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் ஹபிபா பீவி(70). கணவரை இழந்து வாழ்ந்து வந்த இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த துவரங்குறிச்சி காவல் துறையினர் மோப்பநாய் வைத்து கொலையாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் மூதாட்டி கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் நேற்று (ஜன.03) அதே பகுதியைச் சேர்ந்த முகமது பாசித் (16) என்ற சிறுவனை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டியை கொலை செய்தது தான்தான் எனவும், மூதாட்டியின் செல்போன், மூன்று பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றதாகவும் ஒத்துக்கொண்டான். இதனையடுத்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ராபர்ட் வதேரா அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை!