ETV Bharat / state

"பெண் என்பதால் காங்கிரஸ் எம்பி‌ ஜோதிமணியை விட்டு வைக்கிறேன்" - அண்ணாமலை ஆவேசம்! - annamalai about karur mp

Annamalai Attack Jothimani: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரையின் போது காங்கிரஸ் எம்பி‌ ஜோதிமணியின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

BJP state president Annamalai accused MP Jothimani during En Mann En Makkal in Trichy
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 6:27 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

திருச்சி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நீண்ட இடைவேளைக்குப் பின்னர், கரூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 'என் மண், என் மக்கள்' நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது நடைப்பயணத்தின் போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

சுவாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் பாஜக நேரடியாக அதிகாரத்தில் இல்லை. மத்திய அரசாங்கத்தால் எதை எதை செய்ய முடியுமோ, அதைச் செய்து கொண்டிருக்கிறோம். மற்ற பிரச்சினைகளுக்கு மக்கள் சார்பாக, நாங்கள் போராடுகிறோம்.

தமிழகத்தில், பல பகுதிகள் பின் தங்கியிருக்கிறது. இலுப்பூர், தோகைமலை போன்ற சிறு சிறு பகுதி மக்கள் வளர்ச்சி என்பதை தொடாமலேயே போய்விட்டனர். நம்பிக்கையோடு எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் செய்து கொடுக்கிறோம். காவல் துறையின் கவனம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை. முற்றிலும் சிதறிப் போய் விட்டது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு ஆகியோர் மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு, என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

நடுநிலை தவறிய காவல்துறை: திமுக ஆட்சியில் தமிழக காவல் துறை நடுநிலை தவறிவிட்டது. பாஜக கட்சிக்காரர்களைக் கைது செய்வது மட்டுமே தமிழக காவல் துறையின் குறிக்கோளாக உள்ளது. பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பது தவறாகிவிடும். பஸ்சில் மாணவர்கள் தொங்கிச் சென்றதைப் பார்த்த பாஜகவைச் சேர்ந்த சகோதரி நடந்து கொண்ட விதம் பற்றி விவாதிக்கலாம். அதே சமயம், கேள்வி கேட்டதை தவறு என்று சொல்லமாட்டேன். பஸ் டிரைவரோ, கண்டக்டரோ கண்டு கொள்ளாததால் சமூக அக்கறையால் அவர் மாணவர்களைக் கண்டித்திருக்கிறார்.

ஆபாசமாக பேசும் திமுக: சாமானிய மக்களைக் கைது செய்வதன் மூலம், தமிழக காவல் துறையின் மாண்பு குலைந்து கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.பாரதி பேசியதை திமுக மாற்ற முயற்சிக்கிறது. அவர் பேசியதை விட ஒரு சமுதாயத்தைக் கேவலமாக, மோசமாக யாரும் பேசமுடியாது. கடந்த 30 மாதங்கமாக அப்படித்தான் பேசி வருகிறார். திமுகவின் சொத்தே ஆபாசமாக பேசுவது தான். அதனால், அவரது பேச்சுக்கு சப்பைக்கட்டுக் கட்டாமல் ஆர்.எஸ்.பாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

நாகலாந்து மக்கள் புகார் கொடுத்து, அங்குள்ள காவல் துறை வழக்கு பதிந்து அவரை கைது செய்வதற்கு முன், தமிழக காவல் துறை அவரை கைது செய்ய வேண்டும். அவரது பேச்சில் ஆளுநரையும், என்னையும் தவறாகப் பேசியிருக்கிறார். திமுக-வினர் பேசுவதை பற்றியெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. பொதுவெளியில் ஒரு கேள்வி கேட்கும் போது, அவதூறாக பதில் சொல்லலாம் என்று அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். டில்லியில் இருந்து அரசியல் செய்யும் ஜோதிமணி போன்றவர்களை மதித்து அவர் மீது வழக்கு போட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

தரம் குறைந்து விமர்சனம் செய்யும் ஜோதிமணி: பாஜக தினமும் கூட்டம் கூட்டுவது போல், காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் கூட்ட முடியுமா? அரசியல் கட்சியினர் போகாத ஊர்களுக்கு எல்லாம் சென்று கூட்டம் போடுகிறோம். காங்கிரஸ் கட்சியில் இருந்த தொண்டர்கள் பாஜக-வுக்கு வந்து விட்டதால், அங்கு தலைவர்கள் தான் அதிகம் உள்ளனர். வேலை இல்லாததால் தான், ஜோதிமணி அப்படிப் பேசியிருக்கிறார். பெண்கள் மீது கண்ணியம் காட்டும் நான், தரம் குறைந்து விமர்சனம் செய்யும் ஜோதிமணியைப் பற்றி தவறாக பேச விரும்பவில்லை.

ராகுலும், ஜோதிமணியும் சேர்ந்து கர்நாடகாவில் வசூல் வேட்டை நடத்தினார்கள் என்று சொன்னால் தவறாக போய்விடும். வாய்க்கு வந்ததை நான் சொல்ல மாட்டேன். கர்நாடகா தேர்தலின் போது, ஜோதிமணிக்கு சிவக்குமார் தான் பணம் அனுப்பினார். அதற்கான ஆதாரம் உள்ளது. தேவைப்பட்டால் தருவேன்.

பெங்களூருவில் காவல்துறையில் அதிகாரியாக இருந்த எனக்கு ஜோதிமணி யாரிடம் இருந்து பணத்தை வாங்கி வந்தார் என்பதெல்லாம் நன்றாகவேத் தெரியும். பெண் என்பதால் விட்டு வைக்கிறேன். பிழைத்துப் போகட்டும்” என கரூர் எம்.பி ஜோதிமணியை கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: நீட் ரத்தானால் அந்த பெருமையை அதிமுகவிற்கு தந்துவிடுகிறேன் - அமைச்சர் உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.