ETV Bharat / state

திருச்சியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக பேரணி

author img

By

Published : Jan 10, 2020, 8:04 AM IST

திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் பாஜக சார்பில் பேரணி நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டார்.

bjp rally
bjp rally

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றியது. இச்சட்டம் நிறைவேறியது முதல் இன்று வரை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் இச்சட்டத்திற்கு ஆதரவளித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் பல இடங்களில் பேரணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சியில் பாஜக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேரணி நடைபெற்றது. இதில், அகில இந்திய பொதுச்செயலாளர் ரா மாதவ், இல. கணேசன், நடிகை கௌதமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணிகளில் பல மாவட்டங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேசியக் கொடியுடனும், பாரதிய ஜனதா கட்சி கொடியுடன் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் பேரணியில் செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன்!

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இல. கணேசன் கூறுகையில், ”கன்னியாகுமரி உதவி காவல் ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது.

தீவிரவாதிகளுடன் வீரத்துடன் போராடிய காவல்துறை அதிகாரிக்கு பாரதிய ஜனதா கட்சி இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடுருவிய நான்கு தீவிரவாதிகளை போலீசார் கைதுசெய்திருப்பது பாராட்டுக்குரியது.

யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலும், குடியுரிமை வழங்கத் தகுதி உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.” என்றார்.

இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்

Intro:குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சியில் பிரமாண்ட பேரணி இன்று மாலை நடைபெற்றது.Body:திருச்சி:
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சியில் பிரமாண்ட பேரணி இன்று மாலை நடைபெற்றது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சில மாநிலங்களில் கலவரமும் நடந்தது. இந்த வகையில் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. திருச்சியில் இஸ்லாமிய அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளது. இந்த சமயத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து இன்று மாலை இந்த பேரணி புறப்பட்டது. நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, ஒத்தக்கடை வழியாக தலைமை தபால் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது. இந்த பேரணியில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ரா மாதவ், இல. கணேசன், நடிகை கௌதமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணிகளில் பல மாவட்டங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேசியக் கொடியுடனும், பாரதிய ஜனதா கொடியுடன் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தலைமை தபால் நிலையம் அருகே குடியுரிமை சட்ட ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இல. கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கன்னியாகுமாரி மாவட்டத்தில் களியக்காவிளையில் நம்முடைய மாநில எல்லையில் தீவிரவாதிகள் தப்பி ஓட முயன்றதை தடுக்க முயற்சித்த போது காவல் அதிகாரி வில்சன் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது. எனினும் தீவிரவாதிகளுடன் வீரத்துடன் போராடிய காவல்துறை அதிகாரிக்கு பாரதிய ஜனதா கட்சி இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடுருவிய நான்கு தீவிரவாதிகளை தமிழக போலீசார் கைது செய்திருப்பது பாராட்டுக்குரியது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரத பொதுச் செயலாளர் ராம் மாதவ் தலைமையில் இங்கு பேரணி நடைபெறுகிறது. இதில் நடிகை கவுதமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் பொருளாதார சீரழிவை மறைப்பதற்காக இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதாக விவரம் தெரியாதவர்கள் பேசக் கூடிய பேச்சை பத்திரிக்கையாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இப்பிரச்சனையை நாங்கள் கிளப்ப வில்லை. யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலும், குடியுரிமை வழங்க தகுதி உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்றவர்கள் பெரிதாகப் பிரச்சினையை கிளப்பி விட்டதாலும், அதுவும் பாதிப்பில்லாத இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்பது போன்ற பொய்யான பரப்புரை செய்த காரணத்தால் தான் அது தவறான பிரச்சாரம் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவதற்காக நாங்கள் இந்த பேரணி நடத்துகிறோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.