திண்டுக்கல்லிலிருந்து திருச்சி நோக்கி திங்கள்கிழமை (டிசம்பர் 13) மாலை பாஜக கொடிகட்டிய கார் ஒன்று வந்தது. மணப்பாறை அடுத்த பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியைக் கடக்க முயன்றுள்ளது.
அப்போது ஃபாஸ்டேக்கில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகக் கூறி சுங்கச்சாவடியில் பணியிலிருந்த இளங்கோ, காரை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள் காரிலிருந்து இறங்கி பணியிலிருந்தவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நான்கு பேர், பாஜகவினர் ஐந்து பேர் உள்ளிட்ட ஒன்பது பேரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர்