ETV Bharat / state

'காவல்துறை என் மீது பொய் வழக்கு போட துடிக்கிறது' - சூர்யா சிவா குற்றச்சாட்டு! - Complaint against Trichy Bjp OBC Secretary

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சூர்யா சிவா மீது அளித்த புகார் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 16, 2022, 5:01 PM IST

திருச்சி: எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்த்தி என்பவர், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், திருச்சி சண்முகா நகர் 3-வது குறுக்கு சாலையில் உள்ள தனக்கு சொந்தமாக மாண்டேசரி பள்ளியுடன் வீடு இணைந்து உள்ளது. இதனை கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்தும், 6 மாத வாடகையும் தராமல், பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூர்யா சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (நவ.16) பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூர்யா சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா ஆகிய இருவரும் திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா சிவா பேசியதாவது: ”ஆர்த்தியும் அவரது கணவரும் இணைந்து பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து குண்டர்களை வைத்து மிரட்டியதாக ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்துள்ளதாகக் கூறினார். மேலும், தன் மீது கொடுக்கப்பட்ட புகாரில் உண்மை இல்லை என்றும் விளக்கமளித்தார்.

மேலும், காவல்துறைக்கு என் மீது எப்படியாவது வழக்கு தொடர வேண்டும் என்ற நோக்கில் யார் புகார் கொடுத்தாலும் உடனடியாக அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதுபோல் என் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சியான திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது என்று குற்றம் சாட்டிய அவர், பள்ளி வளாக கட்டடம் தொடர்பான புகாரிலும் இதேபோன்று என் மீது காவல்துறை திட்டமிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 13 பேரின் குடும்பத்திற்கு மேலும் ரூ.5 லட்சம் நிதியுதவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.