திருச்சி: பிரசித்திபெற்ற மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் லட்சுமி என்கிற யானை உள்ளது. அந்த யானை கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களுக்கும் சேவைகள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த யானை குளிப்பதற்காக, குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
1993ஆம் ஆண்டு மலைக்கோட்டை கோயிலுக்கு, இந்த லட்சுமி என்கிற யானை கொண்டு வரப்பட்டு மலைக்கோட்டை கோயிலின் பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த யானைக்கு இன்றுடன் 32 வயதாகியுள்ளது. அதனை முன்னிட்டு யானை லட்சுமியை குளிக்க வைத்து, அதற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
பின்னர் மலைக்கோட்டை அடிவாரத்தில் இருக்கும் மாணிக்கவிநாயகர் சந்நிதிக்கு, யானை லட்சுமி கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனையடுத்து பிரசாதங்கள், பழங்கள் ஆகியவை யானைக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்ரமணியன் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்தனர்.
இதையும் படிங்க: 'நான் விரைவில் மாஸ் எண்ட்ரி கொடுப்பேன்' - பிரியாவின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!