ETV Bharat / state

ஒரே நாளில் 714 பேருக்கு ரூ.97.14 கோடி கடன் - திருச்சியில் 21 வங்கிகள் அதிரடி முடிவு! - IOB

திருச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமின் முதல் நாளிலேயே 714 பேருக்கு ரூ.97.14 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank Loan Mela
author img

By

Published : Oct 3, 2019, 10:46 PM IST

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் 21 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கலந்துகொண்டன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகாமை ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வேளாண்மை, சில்லறைக் கடன், சுய உதவிக் குழு, வாகனக் கடன், வீட்டுக் கடன், கல்வி மற்றும் தனிப்பட்ட நுகர்வோர் கடன் உள்ளிட்ட கடன்கள் இந்த முகாமின் மூலம் வழங்கப்பட்டது. மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேற்பார்வையில், மற்ற உறுப்பினர் வங்கிகளும் ஒருங்கிணைந்து இந்த முகாமினை நடத்தின.

இந்த முகாமில் வங்கியில்லாத என்பிபிசி நிதி நிறுவனம், சிறு நிதி நிறுவனம் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஆகியவை கலந்து கொண்டன. இந்த முகாமில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் மறு சீரமைப்பு மற்றும் ஒரே தவணையில் வராக்கடன் தீர்வு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை வரை நடந்த முகாமில் 714 பயனாளிகளுக்கு ரூ.97.41 கோடி கடன் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாம்

இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பிராந்திய பொது மேலாளர் பத்ரோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ’மத்திய அரசின் உத்தரவுப்படி வாடிக்கையாளர்களை அணுகுவதற்கான முயற்சியாக இந்த முகாம் திருச்சியில் நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முதல்கட்டமாக 250 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 150 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. திருச்சியில் நடைபெறும் இந்த இரண்டு நாள் முகாமில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. அதனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள வங்கிகளுக்குச் சென்று கடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்றார்.

மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் பிரேம்குமார் கூறுகையில், ’இங்கு அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து முகாம் நடத்தப்படுகிறது. இது தொடக்கம்தான். நாளையும் இங்கு முகாம் தொடர்ந்து நடைபெறும். இதன் பின்னரும் அந்தந்த கிளைகளில் இந்த கடன் வழங்கும் முகாம் நடைபெறும். சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் 15 நாட்களில் வழங்கப்படுகிறது’ என்றார்.

இதையும் படிக்கலாமே: வங்கியில் கடன் தராததால் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!

Intro:திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் 21 வங்கிகள் இணைந்து கடன் வழங்கும் முகாமை இன்று நடத்தின.

Body:திருச்சி: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கடன் வழங்கும் முகாமில் 714 பேருக்கு 97.41 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம் இன்று நடந்தது. இதில் 21 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கலந்துகொண்டன.
இந்த முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் திருச்சி முன்னோடி வங்கி மேலாளர் சத்யநாராயணன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வேளாண்மை, சில்லரை கடன், சுய உதவி குழு, வாகன கடன், வீட்டுக் கடன், கல்வி மற்றும் தனிப்பட்ட நுகர்வோர் கடன் உள்ளிட்ட கடன்கள் இந்த முகாம் மூலம் வழங்கப்பட்டது.
மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேற்பார்வையில் மற்ற உறுப்பினர் வங்கிகளும் ஒருங்கிணைந்து இந்த முகாமை நடத்தின.
இந்த முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த முகாமில் வங்கியில்லாத என்பிபிசி நிதி நிறுவனம், சிறு நிதி நிறுவனம் மற்றும் வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஆகியவை கலந்து கொண்டன. இந்த முகாமில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் மறு சீரமைப்பு மற்றும் ஒரே தவணையில் வராக்கடன் தீர்வு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மொபைல் வங்கி, வங்கி கணக்கு தொடங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இன்று முதல் நாள் மாலை வரை நடந்த முகாமில் மட்டும் 714 பயனாளிகளுக்கு 97.41 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
முகம் தொடர்ந்து நாளையும் நடைபெறுகிறது.
இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பிராந்திய பொது மேலாளர் பத்ரோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசின் உத்தரவுப்படி வாடிக்கையாளர்களை அணுகுவதற்கான முயற்சியாக இந்த முகாம் இன்று திருச்சியில் நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ம முதல்கட்டமாக 250 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக வரும் 21-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை 150 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. திருச்சியில் நடைபெறும் இந்த இரண்டு நாள் முகாமில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று கடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் பிரேம்குமார் கூறுகையில்,
திருச்சி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இங்கு அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து முகாம் நடத்தப்படுகிறது. இது தொடக்கம்தான். நாளை இங்கு முகாம் தொடர்ந்து நடைபெறும். இதன் பின்னரும் அந்தந்த கிளைகளில் இந்த கடன் வழங்கும் முகாம் நடைபெறும். சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் 15 நாட்களில் வழங்கப்படுகிறது என்றார்.

Conclusion:இந்தக் கடன் வழங்கும் முகாம் நாளையும் நடைபெறுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.