திருச்சி உறையூர் சாலையில் உள்ள ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் குங்குமவல்லி தாயாருக்கு 70ஆவது ஆண்டு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி ஹோமம், பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும், வளைகாப்பு சம்பிரதாய பூஜைகளும் நடைபெற்று அர்ச்சனை செய்யப்பட்ட வளையல், குங்குமம், திருஉருவப் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த விழாவையொட்டி குங்குமவல்லி தாயாருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் அணிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வளைகாப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:கொடியேற்றத்துடன் தொடங்கிய செட்டிகுளம் தைப்பூச விழா