ETV Bharat / state

பிரமாண்ட போராட்டம் நடத்தப்படும் - அய்யாக்கண்ணு அறிவிப்பு - trichy

திருச்சி: வாக்குறுதி அளித்தது போல் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு
author img

By

Published : Apr 10, 2019, 10:13 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. ஆனால் தற்போது வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் பிரதமர் மோடியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அறிவித்தோம்.

அய்யாக்கண்ணு

வரும் 24ஆம் தேதி பிச்சை எடுத்து வேட்புமனு தாக்கலுக்கான தொகையை வசூலித்து 25ஆம் தேதி மனு தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்தோம். இதையடுத்து மத்திய அரசு சார்பில் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நாங்கள் வைத்த ஆறு கோரிக்கைகளில், ஐந்து கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. நதிகள் இணைப்பு, லாபகரமான விலை, 60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம், மரபணு விதை மற்றும் உணவு இறக்குமதிக்கு தடை, விவசாயிகளுக்கான உதவி தொகையை 6 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளை ஏற்று கொண்டுள்ளது. ஆறாவது கோரிக்கையாக அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் தேர்தல் முடிந்த பின்னர் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஆங்கிலோ இந்தியன்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.

அதேபோல் விவசாயிகளின் பிரச்னையை தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர். இந்த கோரிக்கைகள் ஏற்பு காரணமாக நாங்கள் மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். எங்களை தரக்குறைவாக, அவதூறாக பேசுவோர் மீது வழக்கு தொடரப்படும். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது போல் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பிரமாண்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Intro:தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Body:திருச்சி: வாக்குறுதி அளித்தது போல் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், பொதுக்குழு கூட்டத்தில் 28 மாவட்ட தலைவர்கள், 150 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. ஆனால் தற்போது வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் பிரதமர் மோடியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தோம். வரும் 24ஆம் தேதி பிச்சை எடுத்து வேட்புமனு தாக்கலுக்கு தொகையை வசூலித்து 25ஆம் தேதி மனு தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்தோம். இதையடுத்து மத்திய அரசு சார்பில் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நாங்கள் வைத்த ஆறு கோரிக்கைகளில், ஐந்து கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. நதிகள் இணைப்பு, லாபகரமான விலை, 60 வயது நிரம்பி அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம், மரபணு விதை மற்றும் உணவு இறக்குமதிக்கு தடை, விவசாயிகளுக்கான உதவி தொகையை 6 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆறாவது கோரிக்கையாக அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் தேர்தல் முடிந்த பின்னர் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஆங்கிலோ இந்தியன்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப் படுகிறது. அதேபோல் விவசாயிகளின் பிரச்சினையை தெரிவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கைகள் ஏற்பு காரணமாக நாங்கள் மனநிறைவையும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். அதனால் எந்த கட்சிக்கும் ஆதரவும் கிடையாது. ஆனால் எங்களைப் தரக்குறைவாக, அவதூறாக பேசுவோர் மீது வழக்கு தொடரப்படும். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது போல் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பிரமாண்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வேணுகோபால் ராஜ் மற்றும் பல மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.