திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. இப்பேரணியை போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார், காவல் உதவி ஆணையர் விக்னேஸ்வரன், அருணாச்சலம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இப்பேரணியில் பெண்கள் உள்பட சுமார் 250-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். மேலும், சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து விளக்கினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியானது தலைமை அஞ்சல் நிலையம் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: தலைமுறை காக்க தலை கவசம் அணிவோம்' - விழிப்புணர்வு பேரணி