ETV Bharat / state

உடற்பயிற்சி கூடங்களில் விற்கப்படும் பவுடர்களை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சாப்பிட வேண்டாம்: மருத்துவர் கூறும் அறிவுரை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 1:30 PM IST

உடற்பயிற்சி கூடங்களில் விற்கப்படும் புரோட்டின் பவுடர்களை மருத்துவர்கள் பரிசீலனை இல்லாமல் உண்ணக்கூடாது என திருச்சியில் நடைபெற்ற தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கில் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருச்சி: அப்போலோ மருத்துவமனையின் சார்பில், இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம் (CME) நேற்று (நவ.26) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மூத்த மருத்துவர்கள், இதய நோய் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அப்போலோ மருத்துவமனையின் மதுரை கோட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி நீலகண்ணன் கலந்துக்கொண்டார். இக்கருத்தரங்கில், மருத்துவக் கல்வி கவுரவ இயக்குநர் மருத்துவர் எம்.சென்னியப்பன் மருத்துவ கல்வி கருத்தரங்குகள் வாயிலாக, மருத்துவர்கள் தங்களின் துறை சார் அறிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், "டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பல நோயாளிகள், டிரான்ஸ் கேதீட்டர் இதய வால்வு பொருத்துதல் (TAVI), நுண்துளை இதய அறுவை சிகிச்சை (MICS), ஹைப்ரிட் ரிவாஸ்குலரைசேஷன், பச்சிளங் குழந்தை பராமரிப்பு மற்றும் சிக்கலான மின் இயக்கவியல் ஆய்வுகள் உள்ளிட்ட அதிநவீன சேவைகளைப் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர்" என்று கூறினார்.

அப்போலோ மருத்துவமனையின் திருச்சி பிரிவு இதய நோய் நிபுணர் காதர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,”தீவிர நோய் பாதிப்புக்கு ஆளாகி நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ள நோயாளிகள், திருச்சி அப்போலோ மருத்துவமனையில் செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் வாயிலான பயன் அடைந்து வருகின்றனர். இங்கு இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு, ICD சாதனம் பொருத்துவதில் தொடங்கி 3D மேப்பிங் தொழில்நுட்பம் வரை பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

இதய நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில், இதய சுவாச மீட்பு சுழற்சி (CPR) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். உடற்பயிற்சி கூடங்களில் ஏற்படும் மரணங்களை தவிர்பதற்கும் உடற்பயிற்ச்சியாளர்களுக்கு இது குறித்து விழிபுணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. உடற்பயிற்சி கூடங்களில் விற்கப்படும் புரோட்டின் பவுடர்களை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் உண்ணக்கூடாது” என்று கூறினார்.

இக்கருத்தரங்கில், அப்போலோ மருத்துவமனையின் திருச்சி பிரிவு தலைவர் மற்றும் இணை துணைத் தலைவர் ஜெயராமன், மருத்துவர்கள் காதர் சாஹிப் அஷ்ரஃப், ஷியாம் சுந்தர், ரவீந்திரன், ஸ்ரீகாந்த் பூமா, டாக்டர் அரவிந்த், சரவணன், ரோகிணி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: பெருந்துறை சிப்காட் விவகாரம்: "தண்ணீர் மட்டும் அல்ல, காற்றும் மாசடைந்துள்ளது" - எம்எல்ஏ ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.