ETV Bharat / state

'நீதித் துறை, ஊடகத் துறை என அனைத்திலும் பாஜகவின் அரசியல் தலையீடு!' - பாஜக ஆட்சியில் அரசியல் தலையீடு

திருச்சி: பாஜக ஆட்சியில் நீதித் துறை,ஊடகத் துறை என அனைத்துத் துறைகளிலும் பாஜகவின் அரசியல் தலையீடு இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

trichy vck thirumavalavan press meet  தொல். திருமாவளவன்  தொல். திருமாவளவன் செய்திகள்  பாஜக ஆட்சியில் அரசியல் தலையீடு
நீதித்துறை, ஊடகத்துறை என அனைத்திலும் பாஜகவின் அரசியல் தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு
author img

By

Published : Dec 27, 2019, 4:54 PM IST

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான அங்கனூரில் வாக்களிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, "உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழ்நாடு அரசு தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தது. தற்போது, நீதிமன்ற நெருக்கடியின் காரணமாக தேர்தலை நடத்துகிறது. தேர்தல் அலுவலர்களும் காவல் துறையினரும் ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகப் பரவலாகப் பேச்சு எழுந்துள்ளது.

தேசத்திற்கு விரோதமான, மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு அதிமுகவும் பாமகவும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுகவும் பாமகவும் ஆதரவளித்ததன் விளைவாகத்தான் அந்தச் சட்டம் நிறைவேறியுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, கலவரம் போன்றவற்றிற்கு அதிமுக, பாமகதான் காரணம்" என்றார்.

போராட்டம் மூலம் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாக ராணுவத் தளபதி தெரிவித்த கருத்து குறித்து பேசிய திருமாவளவன், பாஜக ஆட்சியில் நீதி, ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் அரசியல் தலையீடு உள்ளது என்றார். பாஜக ஆட்சி செய்தால் ராணுவத் தளபதிகூட அரசியல் பேசுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம் எனச் சுட்டிக்காட்டினார். ராணுவத்தில் அரசியல் தலையீடு எதுவும் இருக்கக் கூடாது எனவும் அவர் கூறினார்.

அனைத்து துறைகளிலும் பாஜகவின் அரசியல் தலையீடு

தமிழ்நாட்டில் சாதிப் பிரச்னை, மதப் பிரச்னை, ஆணவக்கொலை, மகளிர்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதாக வேதனை தெரிவித்தார். அதைக்கட்டுப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 'விரலில் வைத்த மை காயவில்லை' - அலுவலருக்கு அட்வைஸ் செய்த அமைச்சர்

Intro:பாஜக ஆட்சியில் ராணுவ தளபதியும் அரசியல் பேசுவார் என்று திருமாவளவன் கூறினார். Body:திருச்சி:
பாஜக ஆட்சியில் ராணுவ தளபதியும் அரசியல் பேசுவார் என்று திருமாவளவன் கூறினார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள தனது சொந்த கிராமமான அங்கனூரில் வாக்களிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் நீதிமன்ற நெருக்கடி காரணமாக தற்போது தேர்தலை நடத்துகிறது. தமிழக தேர்தல் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும், ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இந்தக் கவலை எதிர்க்கட்சிகளுக்கும் உள்ளது. ஜனநாயக முறையிலும், நியாயமான முறையிலும், நேர்மையான முறையிலும், முறைகேடுகள் இல்லாமல் வாக்கு எண்ணிக்கையை தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையம், காவல்துறை அதிகாரிகளும் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தேச விரோத, மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கு அதிமுக அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு அதிமுக.வும், பாமகவும் மக்களவையில் ஆதரவளித்த தால்தான் சட்டம் நிறைவேறியது. இதன் காரணமாக நாடு முழுவதும் துப்பாக்கிச்சூடு, கலவரம் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு அதிமுகவும், பாமக.வும் தான் காரணம். இதற்கு உரிய பாடத்தை மக்கள் தேர்தலில் புகுத்த வேண்டும் என்றார்.
போராட்டம் மூலம் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவதாக ராணுவ தளபதி கூறியுள்ள கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு திருமாவளவன் பதில் கூறுகையில், பாஜக ஆட்சியில் நீதி, ஊடகம் என அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு உள்ளது. பாஜக ஆட்சி செய்தால் ராணுவத் தளபதி கூட அரசியல் பேசுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம். ராணுவத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், அதிமுக அரசு உடன் மத்திய அரசு நெருக்கமாக இருப்பதால், தமிழக அரசுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. விருதுகள் வழங்கப்படுவதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. தமிழகத்தில் சாதி பிரச்சனை, மதப் பிரச்சினை, ஆணவக்கொலை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, மகளிருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் முதல் 5 இடங்களில் தமிழகம் இடம் பெற்று இருப்பது வேதனை அளிக்கிறது. இதை கட்டுப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ஜார்கண்டில் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.