ETV Bharat / state

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரி மனு - அரசு பள்ளி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வலியுறுத்தி திருச்சியில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

அரசு பள்ளிகளை தரம் உயர்த்த கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு
author img

By

Published : May 10, 2019, 6:49 PM IST

அந்த மனுவில், 'அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக தேர்ச்சிபெற உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். பள்ளியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை இல்லை எனக் கூறி தனியார் பள்ளிகளை நாடுவதை கைவிட வேண்டும்.

கேரளாவில் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு ஒரு வாரத்தில் மட்டும் 30 ஆயிரம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதேபோல் ஒரு சூழ்நிலையை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை அதிகரித்துள்ளது. கட்டண விவரம் அறிவதற்கான வெப்சைட்டும் இயங்கவில்லை. அது கண்காணிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளி அறிவிப்புப் பலகையில் கட்டண தொகையை வெளியிட வேண்டும்.

அரசு பள்ளிகளை தரம் உயர்த்த கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு

அதேபோல் அரசு அறிவித்துள்ள 25 விழுக்காடு ஏழை எளிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும். விதிகளை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர்.

Intro:அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Body:குறிப்பு:
இதற்கான வீடியோ மெயில் மற்றும் எப்டிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

திருச்சி:
அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளின் அதிக தேர்ச்சி பெற உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை இல்லை எனக் கூறி தனியார் மயப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும். கேரளாவில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30,000 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதேபோல் ஒரு சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தி அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை அதிகரித்துள்ளது. தனியார் பள்ளி கட்டண விபரம் அறிவதற்கான வெப்சைட் இயங்கவில்லை. பெற்றோர்களை தனியார் பள்ளிகள் நிர்பந்தப்படுத்தி அதிக தொகையை கட்ட கூடிய சூழல் உள்ளது. கட்டண தொகையை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அரசு அறிவித்துள்ள 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும். இதற்கான இணையதளம் இயங்காத காரணத்தால் இந்த மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Conclusion:கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் 30,000 குழந்தைகள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.