ETV Bharat / state

சவுத் ஏசியன் ஃபெடரேஷன் கேம்ஸில் தங்கம் வெல்வேன் : அனுராதா நம்பிக்கை..! - அனுராதா

திருச்சி: நேபாளில் டிசம்பர் மாதம் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தேர்ச்சி பெற்று இருப்பதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற காவல் துறை உதவி ஆய்வாளர் அனுராதா தெரிவித்தார்.

அனுராதா
author img

By

Published : Aug 8, 2019, 5:18 PM IST

ஸ்ரீரங்கத்தில் உள்ள விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிகுலேஷன் பள்ளியின் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவல் துறை உதவி ஆய்வாளர் அனுராதா கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் பெண்மணியாக சாதனையை படைத்தது, தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டியாலா பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி எடுத்தபோது கிடைத்த நம்பிக்கையால் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது வெகு தூரத்தில் இல்லை என்ற எண்ணம் எனக்கு உருவாகியுள்ளது.

தங்கமங்கை அனுராதா செய்தியாளர் சந்திப்பு

டிசம்பர் மாதம் நேபாளில் சவுத் ஏசியன் ஃபெடரேஷன் கேம்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கவுள்ளேன். இதற்காக நாளை டெல்லி பட்டியாலா செல்கிறேன். கண்டிப்பாக இந்த போட்டியில் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறும் ஏசியன் கேம்ஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வெல்ல பயிற்சி மேற்கொண்டுள்ளேன்.

விளையாட்டு குறித்து விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. முந்தைய காலக்கட்டத்தில் நானும் அவ்வாறுதான் இருந்தேன். கிராமப்புறங்களில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தமிழ்நாடு விளையாட்டில் சிறந்து விளங்கும்” என்றார்.

Intro:ஸ்ரீரங்கத்தில் உள்ள விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிக் பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட தங்கப்பதக்கம் வென்ற காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் அனுராதா செய்தியாளர்களை சந்தித்தார்.

Body:திருச்சி: நேபாளில் டிசம்பர் மாதம் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்று இருப்பதாக பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் அனுராதா கூறினார்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிகுலேஷன் பள்ளியின் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் அனுராதா கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆஸ்திரேலியாவில் நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். பளுதூக்கும் போட்டியில் முதல் பெண்மணியாக இந்த சாதனையை நான் புரிந்துள்ளேன்.
இந்த சாதனை தான் என்னை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாட ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டியாலா பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி எடுத்த போது தான் புது நம்பிக்கை பிறந்தது. இதன் பிறகுதான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது வெகு தூரத்தில் இல்லை என்ற எண்ணம் எனக்கு உருவானது.
டிசம்பர் மாதம் நேபாளில் சவுத் ஏசியன் ஃபெடரேஷன் கேம்ஸ் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கு நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். இதற்காக நாளை டெல்லி பட்டியாலா செல்கிறேன். கண்டிப்பாக இந்த போட்டியில் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறும் ஏசியன் கேம்ஸ், மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வேன்.
விளையாட்டு குறித்து விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. முந்தைய கால கட்டத்தில் நானும் அவ்வாறுதான் இருந்தேன். கிராமபுறங்களில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தமிழகம் விளையாட்டில் சிறந்து விளங்கும் என்றார்.

Conclusion:அனைத்துப்பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்கும் என்று அனுராதா கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.