ETV Bharat / state

'திருச்சி எம்.பி தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு வேண்டும்' திமுகவுக்கு இறுகும் பிடி! - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

2024 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி பாராளுமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் - மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம்திருச்சி பாராளுமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் - மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம்
திருச்சி பாராளுமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் - மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம்
author img

By

Published : Dec 17, 2022, 4:23 PM IST

திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு பிரச்சார தொடக்க விழா மாவட்ட தலைவர் MAM.நிஜாம் தலைமையில் மரக்கடையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள், பிரைமரி நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிரணி, மாணவரணி, தொழிலாளர் அணி மற்றும் KMCC நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச் செயலாளர் ஹாபிழ். அல்லாபக்ஷ் கிராத் ஓத, துணைத் தலைவர் முப்தி உமர் பாரூக் ஹஜ்ரத் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஹூமாயூன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சுதந்திர கிசான் சங்க தேசிய பொருளாளர் பாரூக் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் கருத்துரை வழங்கி,தேசிய மாநாட்டிற்கான பணிக் குழுவையும் அறிவிப்பு செய்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் சாஹிப் மற்றும் மாநில ஊடக அணி துணை ஒருங்கிணைப்பாளர் கோம்பை.நிஜாமுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுறையாற்றினார்.

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -கிற்கு மாநில தலைமை பெற்று தர வேண்டும் எனவும், மார்ச் 10 அன்று சென்னையில் நடைபெற உள்ள தேசிய பவள விழா மாநாட்டிற்கு திருச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை பங்கேற்கச் செய்து வெற்றியடைய உழைப்பு செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகளை விரைவாக முடித்திட வேண்டும் எனவும், சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறுபான்மை மக்களுக்கான அரசின் உதவித்தொகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேற்கண்ட தீர்மானங்களை மாவட்டத் துணைத் தலைவர் ஏர்போர்ட் பாரூக், துணைச் செயலாளர் ஜமால், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சையது ஹக்கீம், மாணவரணி மாநில பொதுச் செயலாளர் அன்சர் அலி, மகளிர் அணி மாவட்ட தலைவர் பைரோஸ், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மௌலானா ஷாகுல் ஹமீத், மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் கஃபூர் ஆகியோர் வாசித்தனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தற்போதே சீட்டு பேரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளதையே இந்த தீர்மானம் கூறுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.