ETV Bharat / state

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுக போர்க்கொடி

author img

By

Published : Mar 13, 2021, 5:08 PM IST

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுக போர்க்கொடி
திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுக போர்க்கொடி

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக பத்மநாபன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பத்மநாபனை மாற்ற வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக மாவட்ட கருமண்டபம் பகுதி செயலாளர் ஞானசேகரன் இன்று (மார்ச் 13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பத்மநாபன் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுவரை தொகுதி குறித்த நிலைப்பாடோ, அறிமுகமோ இல்லாத ஒரு நபரை வேட்பாளராக தலைமை அறிவித்துள்ளது.

இதுவரை கட்சிக்காக எந்த வகையிலும் உழைக்காத ஒருவரை தலைமை எப்படி வேட்பாளராக அறிவித்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களது தலைமைக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். எங்களுடைய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது.

வேட்பாளர் குறித்த எங்களது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறோம். தலைமை நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: வேட்பாளர்கள் தேர்வுக்கு டீம் ரெடி - கமல் ஹாசன் அறிவிப்பு !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.