1972ஆம் ஆண்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, இன்றுடன் 48 ஆண்டுகள் நிறைவடைந்து, 49ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம் சோமரசம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது. அப்போது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குழுமணியில் அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும், பரஞ்சோதி கட்சியின் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே. பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோபு நடராஜன், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், புல்லட் ஜான், எட்டரை ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, அண்ணாவி, செல்வகுமார், பாலகுரு, முத்து, குணா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சமயபுரம் மற்றும் துறையூரில் அதிமுக தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க: 49ஆவது ஆண்டில் அதிமுக: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!