ETV Bharat / state

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்தார் மீது சொத்து மோசடி புகார்!

திருச்சி லால்குடி DSP அலுவலகத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சொத்தை ஏமாற்றி விற்ற வழக்கில் அவரது சித்தப்பா புகார் அளித்துள்ளார்.

நடிகை நயந்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் குடும்பத்தார் மீது சொத்து மோசடி புகார்

author img

By

Published : Jul 7, 2023, 4:42 PM IST

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்தார் மீது சொத்து மோசடி புகார்!

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர், இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. இவர் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம், லால்குடியில் தனது மனைவி பிரேமா உடன் வசித்து வருகிறார். மேலும், சித்தப்பா குஞ்சிதபாதம் கோயம்புத்தூரில் தனது மனைவி சரோஜா உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று (ஜூலை 7) லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சித்தப்பா குஞ்சிதபாதம் மற்றும் பெரியப்பா மாணிக்கம் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்தப் புகார் மனுவில், ''எங்களுக்கே தெரியாமல் எங்கள் அண்ணன் சிவக்கொழுந்து 1990ல் எங்கள் சொத்தை ஏமாற்றி விற்றுள்ளார். அந்த சொத்து எங்கள் முன்னோர்களுடையது. அந்த சொத்தை தன்னுடைய சொத்தாக மோசடி செய்து விற்றுள்ளார். அதைத் தொடர்ந்து லால்குடி உரிமையியல் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு அதற்கான தீர்ப்பு 2017ல் எங்களுக்குச் சாதகமாக வந்தது. ஆனால், இறுதித் தீர்ப்பின் அறிக்கை இன்னும் வெளியிடப்படாமல் தாமதம் ஆவதால், இதுவரை சொத்து எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

மேலும், பொது சொத்தை விற்ற கிரயப் பத்திரத்தில் மிகத் தெளிவாக, மேற்படி நிலத்தில் பிற்காலத்தில் ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால், தன்னுடைய சொத்து அல்லது தன் வாரிசுகளின் சொத்துகளின் மூலமாக வில்லங்கத்தை ஈடு செய்வதாக உறுதி கூறி, அந்த நிலத்தை விற்பனை செய்து உள்ளார்.

எனவே, மோசடியாக பொது சொத்தை விற்ற சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தி, நிலத்தை மீட்டு முழுமையாக எங்களுக்கு கிடைக்க அவர்களை வலியுறுத்த வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் மோசடி வழக்குத் தொடர குற்றப்பதிவு செய்ய வேண்டும்'' எனவும் மனுவில் கூறி இருந்தார்.

இதுகுறித்து விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதத்திடம் கேட்டபொழுது, தான் கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இதயத்தில் நான்கு குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தியதாகவும், இதனால் ஏழ்மை நிலையில் உள்ள தன்னிடம் அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதி இல்லை என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தனது அண்ணன் மாணிக்கத்திடம், தனது குடும்பச் சொத்தில் தனக்கு சேர வேண்டியதை விற்று உதவிடுமாறு கேட்டுள்ளார். ஆனால், சொத்தை விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து முறைகேடாக அண்ணன்கள் மற்றும் தம்பிகளை ஏமாற்றி விற்றுவிட்டதாகவும், இது குறித்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தீர்ப்பாகி, சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துக்கு உரிமை உண்டு எனவும்; மீதி பங்குகள் எட்டு பேருக்கும் உரியது என தீர்ப்பு வந்துள்ளதாக குஞ்சிதபாதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தீர்வு இன்னும் வராத நிலையில், இந்த வில்லங்கத்தை தீர்க்க விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி ஆகியோர் உதவினால் மட்டுமே வில்லங்கம் தீரும் எனக் கூறியதாக தெரிவித்தார். மேலும் தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால், தங்களுக்கு விக்னேஷ் சிவன் சொத்தை விற்க உதவிடுமாறு குஞ்சிதபாதம் கூறினார்.

மேலும் இதுகுறித்து விக்னேஷ் சிவனின் சித்தி சரோஜா கூறுகையில், ''எனது கணவர் குஞ்சிதபாதம் உடல்நிலை சரியில்லாமல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார். எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. எங்களுக்கு குழந்தைகளும் இல்லை. விக்னேஷ் சிவனின் சித்தி என்ற முறையில் கேட்கிறேன். எனது கணவரை காப்பாற்றித் தர சொத்தை மீட்டுத் தர வேண்டும்'' என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மன அழுத்தத்தால் தான் டிஐஜி தற்கொலை செய்துள்ளார் - ஏடிஜிபி அருண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.