ETV Bharat / state

தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்ற ஆர்எஸ்எஸ் திட்டம் - எம்எல்ஏ அப்துல் சமது - RSS turning Tamilnadu into a forest of violence

தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் திட்டமிடுகிறதோ என்ற அச்ச உணர்வு தமிழ்நாடு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அந்த அச்சத்தை போக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்ற ஆர்எஸ்எஸ் திட்டம்- அப்துல் சமது குற்றாசாட்டு

author img

By

Published : Sep 26, 2022, 5:23 PM IST

திருச்சி: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பொது குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார்.

தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்ற ஆர்எஸ்எஸ் திட்டம் - எம்எல்ஏ அப்துல் சமது

அதனைத் தொடர்ந்து மமக பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் சமது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி காந்திஜியின் பிறந்தநாளையொட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உச்ச நீதிமன்றம் நிபந்தனை அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை ஆணையை பெற வேண்டும்.

தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் திட்டமிடுகிறதோ என்ற அச்ச உணர்வு தமிழ்நாடு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அந்த அச்சத்தை போக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவினுடைய அலுவலகங்களில் என்ஐஏ என்கிற மத்திய புலனாய்வு முகமை நடத்திய அந்த சோதனைகள் மாநில உரிமைகளுக்கு எதிராக நடைபெற கூடியதாக இருக்கிறது. இதில் உண்மை நிலை என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதில் ஈடுபட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளாக இருந்தால் அந்தக் குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இதே சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தாங்களே இதுபோன்ற வன்முறை காரியங்களை செய்து கொண்டு அரசின் இடத்தில் பாதுகாப்பு பெற வேண்டும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையை பெற வேண்டும் என்பதற்காக நடந்த சம்பவங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

யார் வன்முறையை கையில் எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பிரச்சனைகளுக்கு மூலக் காரணமானவர்களை இருக்கக்கூடிய சக்திகள் யாராக இருந்தாலும் அந்த வேரை கண்டறிந்து அழிக்க வேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தை பயன்படுத்தக்கூடிய சக்திகள் அரசியலில் பதவிகளைப் பெற வேண்டும் கலவரங்களை ஏற்படுத்தி தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க வேண்டும் நிலை நிறுத்த வேண்டும்.

தமிழ்நாடு மண்ணை மதவெறி மண்ணாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சோதனை குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செய்தி தொடர்பாளர் வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் அதற்கு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதை தான் தமிழ்நாடு அரசினுடைய கருத்தாகவும் நாங்கள் பார்க்கின்றோம். தமிழ்நாடு அரசு இதில் மௌனம் காக்கவில்லை, அதனால் அரசு சரியான கருத்தை வெளியிட்டு இருக்கிறது. மாநில உரிமைகளை பாதிக்கக்கூடிய செயல்பாடுகளில் ஒன்றிய அரசு ஈடுபடாமல் இருப்பதற்கு தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.