ETV Bharat / state

உக்ரைனில் சிக்கிய மகனை மீட்கக்கோரி ஆட்சியர் காலில் விழுந்து துடித்த தாய்! - திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

உக்ரைனில் குடிநீர், உணவு இன்றி சிக்கித் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக் கோரி, தாய் ஒருவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது.

ஆட்சியரிடம் பெண் ஒருவர் கதறி அழுத பெண் தொடர்பான காணொலி

author img

By

Published : Feb 27, 2022, 10:45 PM IST

திருச்சி பெரிய மிளகுபாறைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (பிப்ரவரி 27) மாவட்ட ஆட்சியர் சிவராசு போலியோ சொட்டு சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். அங்கிருந்து ஆட்சியர் கிளம்பியபோது ஒரு பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுதார்.

உடனே அந்தப் பெண்ணின் குறையைத் தெரிவிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அப்போது ஆட்சியரின் காலில் விழுந்து கதறி அழுதது மணப்பாறையைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பது தெரிய வந்தது. உக்ரைனுக்கு படிக்கச் சென்றுள்ள இவரது மகன் ராஜேஷ், குடிநீர், உணவு இன்றி சிக்கித் தவித்து வருவதால் உடனடியாக அவரை மீட்டுத்தரக்கோரி கோரிக்கை விடுத்தார்.

ஆட்சியரிடம் காலில் விழுந்து துடித்த உக்ரைன் மாணவரின் தாயார்

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறி மாணவரை மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். மகனை மீட்கக்கோரி தாய் நடத்திய பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கிய மகனின் நினைவில் உயிரிழந்த தாய்; இறுதிச்சடங்கிற்கு வரமுடியாமல் அலைபேசியில் கதறி அழுத மகன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.