ETV Bharat / state

தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் எஸ்கேப்.. திருச்சியில் நடந்தது என்ன? - woman escaped After taking off the thali in trichy

திருச்சி அருகே தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக உப்பிலியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 15, 2023, 12:27 PM IST

திருச்சி: துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் ( வயது 25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி ( வயது 23) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

நேற்று(செவ்வாய்கிழமை) தாய் வீட்டுக்கு கணவர் வீட்டுக்கு திரும்பிய புது மணப்பெண் கிருஷ்ணவேணி தனது தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு மாயமானதாக தெரிகிறது. செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், கணவர் கார்த்திக், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உப்பிலியாபுரம் போலீசார் கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர். திருமணமான 20 நாட்களில் இளம்பெண் மாயமான விவகாரத்தில் அவரை யாரேனும் கடத்திச் சென்றார்களா? அல்லது காதல் விவகாரத்தில் அவரே வீட்டை விட்டு வெளியேறினாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பேஸ்புக் மூலம் 9 திருமணம்.. நகை, பணத்துடன் ஓட்டம்.. பலே பெண்ணை தேடும் போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.