ETV Bharat / state

ஊரடங்கில் ஜல்லிக்கட்டு: உதவி ஆய்வாளரை தாக்கிய 9 பேர் கைது!

ஊரடங்கின் போது ஜல்லிக்கட்டு நடத்தியவர்களை தடியடி நடத்தி கலைத்த காவல் உதவிஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவலர் தாக்கப்பட்டது தொடர்பான காணொலி
காவலர் தாக்கப்பட்டது தொடர்பான காணொலி
author img

By

Published : Jan 18, 2022, 10:56 AM IST

திருச்சி: லால்குடி அருகே அமைந்துள்ளது கீழரசூர் ஊராட்சி. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்துவது வழக்கம். அதே போல நடப்பாண்டிலும் ஜல்லிக்கட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஞாயிரன்று முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கின்போது கீழரசூர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவதாக கல்லக்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், தடியடி நடத்தி ஜல்லிக்கட்டு விழாவை தடுத்து நிறுத்தினர்.

அப்போது தடியடி நடத்திய காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் மீது அப்பகுதி மக்கள் கற்களால் தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட சக காவலர்கள், லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இளங்கோவன் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காவலர் தாக்கப்பட்டது தொடர்பான காணொலி

இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது தொடர்பாக மணிராஜ் (25), நல்லூசாமி (65), ராஜேந்திரன் (60), மணி (34), ராஜா (38), ராமசுந்தரம் (62), ரமேஸ் (30), விக்னேஸ்குமார் (30), சுரேஷ் (19) ஆகிய 9 பேரை கல்லக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி, லால்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஊரடங்கு நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உதவிய கீழரசூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே கிராமத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதைக் கண்டித்த லால்குடி காவல் ஆய்வாளர் பாலாஜி கடுமையாக தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - இரு காவலர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.