தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயிரத்து 843 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது. 25 ஆயிரத்து 344 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில் 163 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், புதிதாக எட்டு பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 171ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த எட்டு பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேரும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்மூலம் திருச்சியில் இதுவரை 116 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். திருச்சியில் தற்போது 54 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை கரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.