கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு ஆறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் குணசேகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”திருச்சி விமான நிலையத்திற்கு 2019-20ஆம் நிதியாண்டில் 40 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கரோனா தொற்று காரணமாக விமான நிலையம் முடங்கியதால் 6 கோடி ரூபாய்வரை வருவாய் குறைந்து, 35 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதேபோல், சரக்கு ஏற்றுமதி பிரிவில் 2 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு கோடியே 68 லட்ச ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கரோனா தாக்கம் முடிந்தவுடன் முதல்கட்டமாக உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. மத்திய அரசின் முடிவை பொறுத்தே வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: சென்னையிலிருந்து சிங்கபூருக்கு இயக்கப்பட்ட விமானம்!