ETV Bharat / state

திருச்சியில் 550 கிலோ கலப்பட தேயிலை தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்!

author img

By

Published : Jun 21, 2023, 6:41 PM IST

திருச்சியில் விற்பனைக்கு வைத்திருந்த 550 கிலோ கலப்பட தேயிலை தூள் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கலப்படம் குறித்து பொதுமக்கள் எந்நேரமும் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருச்சி: திருச்சி மற்றும் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போதைப் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சட்ட விரோதமாக விற்பனை செய்தால் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி அரியமங்கலம் பகுதியில் கலப்பட தேயிலை விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபுக்கு தொடர்ந்து ரகசிய புகார் வந்து கொண்டிருந்தது. புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் திருமகள் தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

தாவீது என்பவரது மகன் செல்வினுக்குச் சொந்தமான குடோனில் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு செல்வராஜ், வசந்தன்,பொன்ராஜ், இப்ராஹிம் மற்றும் ஜஸ்டின் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு விற்பனைக்காக சுமார் 550 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். தேயிலை பாக்கெட்டுகளை பிரித்து ஆய்வு செய்ததில் அவைகள் கலப்பட தேயிலை என தெரிய வந்தது. மேலும், கலப்படத்துக்கு பயன்படுத்திய பாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கபட்டது. இவர்கள் எந்த எந்த கடைகளுக்கு மொத்தமாக கலப்பட தேயிலை தூள் பாக்கெட்களை விற்பனை செய்தனர் எந்த ஊரிலிருந்து இறக்குமதி செய்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

தேயிலை தூள்களை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்யக்கூடாது என்றும் பொது மக்களும் தாங்கள் வாங்கும் தேயிலை தூளில் கலப்படம் இருப்பதாக சந்தேகித்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்க வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 9944959595, 9585959595‌ மாநில புகார் எண் 9444042322 எண்ணிற்கு பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட நியமன அலுவலர்‌ உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Tasmac closed: 500 டாஸ்மாக் கடைகள் மூடல்.. எந்தெந்த கடைகளை மூட அரசு திட்டம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.