ETV Bharat / state

குளத்தில் அனுமதியின்றி மண் எடுத்த 3 பேர் கைது - trichy latest news

திருச்சி: மணப்பாறை அருகே குளத்தில் அனுமதியின்றி மண் எடுத்த மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

3 arrested for taking soil in pond without permission

author img

By

Published : Jun 6, 2021, 8:07 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி குளத்தில் சிலர் அனுமதியின்றி மண் எடுப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று சோதனைசெய்தனர்.

அப்போது அங்கு செல்ல கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சின்னையா மகன் கமலக்கண்ணன் (30), உசிலம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மணி (43), புதுகாலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஸ்வரன் (30) ஆகியோர் குளத்தில் மண் எடுத்த நிலையில் கையும்களவுமாகப் பிடிபட்டனர்.

இதையடுத்து, அவர்களிடமிருந்து ஒரு லாரி, ஜேசிபி இயந்திரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை மணப்பாறை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். பின்னர் மூவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கோயில் உண்டியல்கள் திருட்டு: இளைஞர்களை கொத்தாகப் பிடித்த காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.