ETV Bharat / state

ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்! - தங்கம் பறிமுதல்

திருச்சி: ஷார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த நான்கு பயணிகளிடம் ரூ.37 லட்சம் மதிப்புள்ள 1,100 கிலோ தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செயதனர்.

1kg gold seized
author img

By

Published : Jun 18, 2019, 9:01 AM IST

ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த முகமது ரஃபீக், முகமது ரியாஸ் அலி, எஸ்.பி. பட்டிணத்தைச் சேர்ந்த முகமது ஹசீர், முகமது முஸ்தபா ஆகியோரது செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தன.

அதனால் அந்த நான்கு பேரையும் அலுவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நான்கு பேரும் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,100 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த, நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro: திருச்சி விமானநிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுBody:திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் 1.100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த முகமது ரபீக், முகமது ரியாஸ் அலி, எஸ். பி. பட்டிணத்தை சேர்ந்த முகமது ஹசீர், முகமது முஸ்தபா ஆகியோரது செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தது.
அதனால் அந்த நான்கு பேரையும் அதிகாரிகள் பிடித்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது 4 பேரும் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 37
லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,100 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:நான்கு பேரிடமும் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.