ETV Bharat / state

துணை மின்நிலையத்தில் தீ; இருளில் மூழ்கிய 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள்!

அரியலூர்: துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

துணை மின்நிலையத்தில் தீ விபத்து
author img

By

Published : Jun 10, 2019, 7:52 AM IST

பொய்யூர், பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து அரியலூருக்கு மின்சாரம் வரும் முக்கியமான மின்மாற்றி உள்ளது. இங்கு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

இதனைப் பார்த்த மின்சாரத் துறை ஊழியா்கள் அரியலூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே, பெரம்பலூர், பொய்யூர் துணை மின் நிலையங்களை தொடர்பு கொண்டு மின்சார விநியோகத்தை ஊழியர்கள் நிறுத்தக் கூறினர்.

துணை மின்நிலையத்தில் தீ விபத்து

இதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருந்தபோதும் மின்மாற்றி முற்றிலும் கருகி நாசமானது.

இதனால் அரியலூர், செந்துறை, கீழப்பாவூர், தேளூர், நடுவலூர் ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

*அரியலூர் -துணை மின்நிலையத்தில் தீ*

*100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது*

அரியலூரில் உள்ள அரியலூர் துணை மின் நிலையத்திற்க்கு பொய்யூர், பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து 
அரியலூருக்கு  மின்சாரம் வரும் முக்கியமான மின்மாற்றி அரியலூர் துணை மின் நிலையதத்தில் உள்ளது.

இது  இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

இதனை பார்த்த மின்சாத்துறை ஊழியகள் அரியலூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்த பிறகு பெரம்பலூர் மற்றும் பொய்யூர் துணை மின் நிலையங்களை தொடர்பு கொண்டு தீ விபத்தை கூறி  மின் சார வினியோகத்தை நிறுத்த கூறினர்

பின்னர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

இருந்த போதும் மின்மாற்றி முற்றிலும் கருகி சேதமடைந்தது

இதனால் அரியலூர், செந்துறை, கீழப்பாவூர்,தேளூர்,நடுவலூர் ஆகிய துணை மின் நிலையத்திற்க்கு உட்பட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.