திருச்சி விமான நிலையத்தில் உள்ள மத்திய சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினருக்கு தங்கம் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் திருச்சிக்கு வந்துள்ளது. அதில் பயணித்த சென்னையைச் சேர்ந்த நவாஸ் ஷெரீப் மற்றும் மைக்கேல் கரணி ஆகியோரின் உடமைகளை சோதனையிட்டபோது தங்கம் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்புள்ள 495 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அலுவலர்கள் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.