ETV Bharat / state

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 குத்து விளக்கு பூஜை

பௌர்ணமியையொட்டி, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 7, 2023, 11:33 AM IST

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 குத்து விளக்கு பூஜை

திருச்சி: அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை நேற்று (பிப்.6) நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகையான பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு அறிவித்தப்படி, பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் 108 குத்து விளக்கு பூஜை நடைபெறும் என அறிவித்தனர். அதன்படி, அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் குத்துவிளக்கு பூஜையை இணை ஆணையர் கல்யாணி தொடங்கி வைத்தார். இந்நிலையில் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன.

மெலும் இதுகுறித்து இணை ஆணையர் கல்யாணி, ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும், அதில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், ஆதார் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று பணம் செலுத்தும்போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேற்கண்ட பொருட்கள் விளக்கு பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பூஜையில் புதிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அத்துமீறலுக்குள்ளாகும் நீர் தொட்டி: அன்று புதுக்கோட்டை.. இன்று விருதுநகர்... கைப்பற்றப்பட்ட நாயின் சடலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.