ETV Bharat / state

திருச்சியில் 105 நகரும் நியாய விலைக்கடைகள் தொடக்கம்! - வளர்மதி

திருச்சியில் நகரும் நியாய விலைக் கடைகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

mobile_ration_
mobile_ration_
author img

By

Published : Oct 1, 2020, 6:40 PM IST

திருச்சி: தமிழ்நாட்டில் கடந்த மாதம் 21ஆம் தேதி, அம்மா நகரும் நியாயவிலைக்கடை திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், திருச்சியில் அமைச்சர்கள், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் 105 நகரும் நியாய விலைக்கடையைத் திறந்து வைத்தனர்.

இதன் மூலம் 15 ஆயிரத்து 744 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, துறையூர் அருகே உள்ள பச்சைமலை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் நியாயவிலைக்கடை செயல்பட்டு வருகிறது.

திருச்சி நகர கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்த இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கூட்டுறவு வங்கி வளாக புதிய நுழைவு வாயில் வளைவு, நகரும் நியாயவிலைக் கடைகள், கடன் வழங்குதல் ஆகிய திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை இன மக்களுக்காக ‘டாம்கோ‘ திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 289 பயனாளிகளுக்கு 1.28 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் படி, ஒரு பங்கு பயனாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் இரண்டு பங்கு தொகையை அரசு கடனாக வழங்குகிறது. இதுபோல் சிறுபான்மை இன மக்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 105 நகரும் நியாய விலை கடைகள் மூலம் 15 ஆயிரத்து 744 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவர். திருச்சியிலுள்ள1225 கடைகளில் பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

25.82 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 56.4 லட்சம் முகக் கவசங்கள் அளிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில், முன்னோட்ட அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன்கடைகளின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

இத்தகைய சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் வளர்மதி, திருச்சியில் கடந்த நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 346 பேருக்கு ரூ 1.04 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில், கடந்த 30 ஆம் தேதி வரை 353 பேருக்கு 2.12 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் 2 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்க லோன் மேளா நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இதையும் படிங்க : ராமகோபாலன் உடல் திருச்சியில் நல்லடக்கம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.