ETV Bharat / state

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை மிரட்டிய அரசியல்வாதிகள்

திருச்சி: நூறுநாள் வேலைவாய்ப்பை முறையாக வழங்கக்கோரி நடைப்பெற்ற சாலை மறியல் போரட்டத்தில் பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

protest
author img

By

Published : Jun 21, 2019, 7:36 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள ஆவிகாரப்பட்டி, வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடந்த ஒரு வருட காலமாக தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று (ஜூன் 21) காலை மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கிருந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் மறியலில் ஈடுபடக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களை மிரட்டிய அரசியல்வாதிகள்

வாக்குவாதம் முற்றி அங்கிருந்த பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்கப்படும் என ஊராட்சி செயலர் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:முறையாக வேலை வழங்கக்கோரி சாலை மறியல் செய்த பொது மக்களிடம் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தள்ளுமுள்ளு.

Body:திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஆவிகாரப்பட்டி,வளையப்பட்டி.இங்குள்ள மக்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.அப்போது அங்கிருந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் பொதுமக்களிடம் மறியலில் ஈடுபட கூடாது என்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே அங்கிருந்த பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து பண்ணப்பட்டி பஞ்சாயத்து முன்னால் தலைவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மறியலில் ஈடுபட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு 100 நாள் வேலை தொடர்ந்து முறையாக பணி வழங்க வேண்டும் என ஊராட்சி செயலர் இடம் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மேலாகியும் ஊராட்சித் துறை அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரசியல் கட்சியினர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மறியலில் ஈடுபட்டவர்களை மிரட்டிய சம்பவம் இப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.