தூத்துக்குடி: மதுபோதையில் சாலையில் தாறுமாறாக பேருந்தை செலுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை பயணிகள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த பேருந்தில் இருந்த பயணிகள் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து சிலோன் காலனி நோக்கி 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு நகர பேருந்து நேற்று இரவு (TN 72 N 1687) சென்று கொண்டிருந்துள்ளது.
இந்த வழித்தட அரசு பேருந்தை பாலசுப்பிரமணியன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். அப்போது, அவர் பேருந்தை அங்கும், இங்கும் எனத் தாறுமாறாக ஓட்டுவதை கண்ட பயணிகள் நடத்துனிரிடம் வண்டி ஓட்டுவது சரி இல்லை என்றும், எதற்காக இப்படி ஒட்டுகிறார் எனவும் கேட்டுள்ளனர். அப்போது அவர் சரியான பதில் அளிக்கமால் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தன்னை மிஞ்சிய மது போதையில் இருந்ததை தாங்கள் கண்டுபிடித்ததாக பயணிகள் தெரிவித்தனர். உடனடியாக நிறுத்த சொல்லி, பேருந்தை அவர் இயக்கக் கூடாது எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கிண்டி சம்பவம்; விக்னேஷுக்கு ஜாமீன் கொடுத்தது ஏன்..? ஐகோர்ட் நீதிபதி கொடுத்த விளக்கம்..!
அப்போது, பேருந்து நிறுத்தப்பட்டு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பயணிகளுக்கும் ஓட்டுநருக்கு இடையே வாக்குவாதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஓட்டுநரை அந்த பேருந்தில் வந்த பயணிகள் தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் விரைந்து வந்த அரசு பேருந்து ஓட்டுநரை மீட்டு சோதனை செய்ததில் அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டிய குற்றத்திற்காக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், இது குறித்து ஓட்டுநரிடம் கேட்கையில், தான் குடும்ப பிரச்னையில் இருப்பதாகவும், அது எனக்கு மன உளைச்சலை தந்ததால் நான் மது அருந்தினேன் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.