கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மட்டுமே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சிங்கப்பூரிலிருந்து இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தடைந்தது. அதில், அழைத்துவரப்பட்டவர்களை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த சேகர், சிவகங்கையைச் சேர்ந்த சசிவரன், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகவேல் ஆகியோர் தங்களது உடலில் மறைத்து தங்க நகைகளை கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், டிரிலிங்க் இயந்திரத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டியும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கிலோ 76 கிராம் தங்கத்தின் மதிப்பு 55 லட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: தவளைகளை வேட்டையாடி சமைத்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றிய இருவர் கைது