ETV Bharat / state

விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ தங்கம்!

திருச்சி: ஷார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ தங்கத்தை, சுங்கத்துறை அலுவலர்கள் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானத்தில் அனாதையாக கிடந்த 1.5 கிலோ தங்கம்!
author img

By

Published : Oct 18, 2019, 6:43 PM IST

ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நாள்தோறும் திருச்சி விமான நிலையம் வந்தடையும். அந்த வகையில், நேற்று அதிகாலை ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.

அதன்பின், விமானத்தை தூய்மை படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்ட போது, விமானத்தின் உள்ளே கவர் ஒன்று கிடைத்தது. அதனை ஆய்வு செய்த சுங்கத்துறை அலுவலர்கள், ஷார்ஜாவில் இருந்து பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தி வந்ததை உறுதி செய்தனர்.

சுமார் 1.494 கிலோ எடையுள்ள அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.57.16 லட்சம் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சுங்கத்துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க:

ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகும்படி இருக்கும் வளாகங்கள் கண்டறியப்பட்டால் சிறைதண்டனை!

Intro:ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.Body:

திருச்சி:
ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்ஜாவில் இருந்து தினமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்தடையும்.   இதேபோன்று நேற்று அதிகாலை சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். இதையடுத்து விமானத்தை தூய்மை படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் உள்ளே ஒரு கவர் கிடந்துள்ளது. அந்த கவரை பிரித்து பார்த்தபோது பேஸ்ட் வடிவில் இருந்தது. அதனை  சுங்கத்துறை அதிகாரிகளிடம் துப்புரவு பணியாளர்கள் ஒப்படைத்தனர். அதனை ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சார்ஜாவில் இருந்து பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தி வந்ததை உறுதி செய்தனர். பேஸ்டில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்தனர். ரூ.57.16 லட்சம் மதிப்புள்ள 1.494 கிலோ தங்கம் கிடைத்தது.  முதற்கட்ட விசாரணையில் ஷார்ஜாவில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தவர் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விமானத்தின் உள்ளேயே தங்கத்தை வைத்துவிட்டு சென்று இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.