மதுரை மாவட்டம் திருப்பாளை மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலன் (22). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வசித்துவந்த 17வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக ஆண்டிபட்டி மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில். இன்று அதற்கான இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளி பாலனுக்கு 10ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கீதா தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து குற்றவாளியைத் தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்கலாமே:திருட்டு பயிற்சிப் பட்டறை நடத்திய திருடன்... வலைவீசி பிடித்த காவல் துறை!