இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரிதினும் அரிதாய் இந்த மண்ணில் உதித்த இரண்டு மகத்தான தலைவர்களை நெஞ்சில் நிறுத்தி நாம் அனைவரும் நன்றி செலுத்த வேண்டிய நாள் அக்டோபர் 2ஆம் தேதியாகும்.
அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளில் கண்மூடியவர் தலைவர் காமராஜர். மக்களை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்து மறைந்த இவ்விருவரையும் அவர்களுடைய பிறந்த நாள், மறைந்த நாள்களில் மட்டும் நினைவு கூராமல் மற்ற நாள்களிலும் அவர்கள் காட்டிய வழியில் நடக்க வேண்டும்.
மக்களில் நல்வாழ்வுக்காக வாழ்ந்து மறைந்த அந்த தலைவர்களின் வாழ்வைப் போல மக்களும் தங்களது வாழ்க்கை முறையை அதற்கேற்றார் போல வகுத்துக் கொள்ள வேண்டும்.
மதுவற்ற மாநிலம் ஊழலற்ற நிர்வாகம் என்பதை நம் தாரக மந்திரம் மதுவற்ற மாநிலம் கால நம் சக்திக்கு மீறி நாம் அழைக்கின்றோம்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் மாற்று அரசியலை நாம்தான் அறிமுகப்படுத்தினோம்.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்னிறுத்தி ஊழல் மலிந்த இரண்டு திராவிடக் கட்சிகளில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்கும் அந்த சரித்திர சாதனையை ரஜினிகாந்தால் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற எதார்த்த நிலையை பூரணமாக உணர்ந்து அவரை முதல்வராக வேண்டும் என்ற ஒரே முடிவுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
சமய நல்லிணக்கம், மதச்சார்பற்ற ஆட்சி முறை, ஊழலுக்கு எதிரான நிர்வாகம் சாதி மத உணர்வுகளுக்கு எந்த நேரமும் இடம் தராத நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்த காந்தியமே தனது அடையாளங்களாக கொண்ட காமராஜரின் வழித்தடத்தில் நாம் கொண்டுள்ள நமது கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடி எடுத்து வைக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம்" என தெரிவித்துள்ளார்.