திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற குறுஞ்செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறையின் திருச்சி மத்திய மண்டலம் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த விர்ச்சுவல் காப் செயலியை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் அறிமுகம் செய்தார்.
இந்த விழாவில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு)செந்தில்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.