இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதாவது, "தங்கும் விடுதியில் தனிமைப்படுத்திய என் கணவரை அழுகிய நிலையில் உடற்கூறாய்வு செய்து சடலமா கொடுத்துட்டாங்க சார்’ - கதறி அழும் சந்திராவை தேற்ற வார்த்தைகள் இல்லை.
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த சந்திராவின் கணவருக்கு கரோனா தொற்று கிடையாது. ஆனால், தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர் குளியலறையில் உயிரிழந்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டவரைக் கண்காணிக்க முடியவில்லை என்றால் எதற்குத் தனிமைப்படுத்த வேண்டும்? வெறும் கணக்குக் காட்டுவதற்கா? எளியவர்களின் கண்ணீர் உங்களை சும்மா விடாது. சந்திராவுக்கான உதவிகளை கழகம் முன்னின்று செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா குறித்து பயமில்லை: உயிருடன் விளையாடும் அரியலூர் மக்கள்!