மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே வீட்டில் நடத்திவரும் சிறிய அளவிலான பெட்டிக்கடையில் வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த இருவர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 106 மது பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரிய வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (45). அவர் தனது வீட்டிலேயே பெட்டிக்கடை ஒன்றை நடத்திவருகிறார்.
அங்கு அவர் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து, சட்டவிரோதமான விற்பனை செய்துவருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து, சிந்துபட்டி காவல் துறையினர் பெரிய வாகைகுளத்தில் உள்ள அறிவழகனின் பெட்டிக் கடையில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில், அவர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 79 மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அறிவழகன் கைதுசெய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.