இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றி காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலுமானது.
29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.