ETV Bharat / state

தாமதமாகும் பருத்தி விற்பனை - வேதனையில் விவசாயிகள் - பருத்தி விவசாயிகள்

திருவாரூர்: பருத்தியை விற்பனை செய்வதற்காக இரண்டு நாட்களாக விவசாயிகள் விற்பனைக் கூடத்தில் காத்திருந்தனர்.

பருத்தி
பருத்தி
author img

By

Published : Jul 5, 2020, 8:06 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி பணப்பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விவசாயிகள் எடுக்கும் பருத்தியை விற்பனை செய்வதற்கு மாவட்டம் முழுவதும் நான்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறும் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் எடுக்கப்பட்டு, அரசு சார்பில் ஒருகிலோ ரூ.50 முதல் 55 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து, பருத்தி விற்பனை செய்வதற்காக விவசாயிகள் பருத்தி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மூட்டைகளுடன் காத்திருக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "நாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி பருத்தி சாகுபடி செய்து வருகின்றோம். ஆனால், அரசின் விலையை கொடுக்காமல் 30 ரூபாயிலிருந்து, 35 ரூபாய்க்கு மட்டுமே பருத்தியை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எடுக்கிறார்கள்.

இதனால் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார நஷ்டம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அடுக்கி வைப்பதற்கான கட்டடங்கள் பாழடைந்து இருப்பதாலும், இடவசதி இல்லாததால் வெளியில் அடுக்கிவைக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், தற்போது பருவழை பெய்துவருவதால் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:'மலையாய் குவிந்துகிடக்கும் தேங்காய்கள்; இப்போ நட்ட பிள்ளயும் சோறு போடல' - வேதனைப்படும் தென்னை விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.