தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.