ETV Bharat / state

கோயில் நில ஆக்கிரமிப்பு : அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு! - Court ordered to submit report on action taken by the Hindu Aranilaiyam Department

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை குறித்து செப்டம்பர் 24ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் நில ஆக்கிரமிப்பு : அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Sep 21, 2020, 6:27 PM IST

சென்னை: ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை குறித்து செப்டம்பர் 24ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 47 பெரிய கோயில்களில் உபரி நிதியிலிருந்து 10 கோடி ரூபாயை சிறு கோயில்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அதேபோல, இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதால் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை நிற்கும் அலுவலர்கள் மீது குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ஆன்ட்டி கலெக்சன் என்ற அமைப்பும், ரமேஷ் என்பவரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(செப்.21) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "சம்பந்தப்பட்ட கோயில்களின் அறங்காவலர்களிடம் அனுமதி பெற்ற பிறகே நிதி ஒதுக்குவது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக நிதி ஒதுக்கும் படி அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டத்தை மீறிய உத்தரவாகும்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு? ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு? ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது எடுத்த நடவடிக்கை? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வு கடந்தாண்டு உத்தரவிடப்பட்டுள்ளது" என சுட்டிக்காட்டப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்," நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையை தயாராகி வருகிறது" என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறித்து அறிக்கையை செப்டம்பர் 24ஆம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.