ETV Bharat / state

பெயர்ந்துவரும் தார் சாலை: முறைகேடுகளை விசாரணை செய்யக்கோரும் பொதுமக்கள்!

விருதுநகர் : சாலையை அமைத்து 10 நாள்கள் கூட நிறைவுபெறாத நிலையில் கையில் வழித்து அள்ளும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

பெயர்ந்துவரும் தார் சாலை : முறைகேடுகளை விசாரணை செய்யக்கோரும் பொதுமக்கள்!

author img

By

Published : Jul 30, 2020, 9:47 PM IST

கிராம ஊராட்சிகளின் சாலை வசதியை மேம்படுத்தும் விதமாக கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி முகமை மூலமாக மேற்கொள்ளப்படும் இப்பணியில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.

ஊராட்சிகளுக்கான திட்டம் என்பதால் புறநகரில் நடக்கும் சாலைப்பணியை மாவட்ட அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், சாலைகள் குறிப்பிட்டப்படி அமைக்கப்படாமல் பெயருக்கு அமைக்கப்பட்டு பெரிய அளவில் முறைகேடு நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டி பஞ்சாயத்தில் இருந்து மம்சாபுரம் கண்மாய்க்கரை வரை 5 கிலோ மீட்டர் தூரம் ரூ.15 லட்சம் மதிப்பில் 10 நாள்களுக்கு முன்னதாக அமைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் விவசாய பணிக்காக வந்து செல்கின்ற இந்த சாலை ஒரு மழைக்கு கூட தாங்காத வகையில் பெயர்த்துக் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.

நான்கு சக்கரம், இரு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும்போது பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும், கரைப் பகுதிகளில் தாமரபரணி குடிநீர் குழாயானது சாலை அமைக்கும் பணியின்போது சேதமடைந்ததால் குழாயிலிருந்து குடிநீர் வீணாகி வெளியேறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் இதுகுறித்து துறை சார்ந்தவர்களை முறையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.